போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி


போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 April 2021 8:21 PM GMT (Updated: 27 April 2021 8:29 PM GMT)

போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆனாலும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் சில வாரங்களாக இரட்டை இலக்கத்தில் கொரோனா பரவி வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையம் முழுவதும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story