நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள் உள்பட 238 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள் உள்பட 238 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 14,852 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,857 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள் உள்பட 238 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,095 ஆக உயர்ந்தது. இதில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 128 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 114 பேர் பலியாகி இருந்த நிலையில், 13,251 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,730 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story