இருக்கூர் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
இருக்கூர் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் இருக்கூர் அருகே உள்ள தெற்கு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அபிராமி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. அபிராமிக்கு சில மாதங்களாக காலில் அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று அபிராமி கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த பொன்னம்மாள் என்பவர் அவ்வழியாக சென்றவர்களிடம் பெண் கிணற்றில் குதித்தது குறித்து கூறியுள்ளார்.
பின்னர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 40 அடி ஆழத்தில் விழுந்து இறந்த அபிராமியின் உடலை மீட்டனர். பரமத்தி போலீசார் அபிராமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிராமிக்கு திருமணமாகி 3 ஆண்டுக்குள் இறந்துள்ளதால் இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story