நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடக்கம்


நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடக்கம்
x
தினத்தந்தி 27 April 2021 8:47 PM GMT (Updated: 27 April 2021 8:47 PM GMT)

நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது.

நெல்லை, ஏப்:
நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.

வசந்த உற்சவம்

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவ விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது. 
வசந்த காலத்தில் சுவாமி-அம்பாளுக்கு வெட்கை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் சுவாமி-அம்பாளை வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பப்பெற்ற அகழியின் நடுவே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள செய்து குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களால் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

சுவாமி -அம்பாள் உலா

அதைத்தொடர்ந்து சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு பருத்தி ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. 
மாலையில் வெற்றிவேர் வேயப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் 11 முறை வசந்த மண்டப உலா வருதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

Next Story