பிரபல ரவுடி, பெங்களூருவுக்குள் ஓராண்டு நுழைய தடை


துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா.
x
துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா.
தினத்தந்தி 28 April 2021 2:27 AM IST (Updated: 28 April 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் பிரபல ரவுடியை, பெங்களூருவுக்குள் ஓராண்டு நுழையவதற்கு தடை விதித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரு: தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் பிரபல ரவுடியை, பெங்களூருவுக்குள் ஓராண்டு நுழையவதற்கு தடை விதித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவிட்டுள்ளாா்.

11 வழக்குகள்

பெங்களூரு அல்சூல் அருகே வசித்து வருபவர் கார்த்திக் (வயது 30). இவர், பிரபல ரவுடி ஆவார். கார்த்திக் மீது கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி உள்பட 11 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் அவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் விதமாக அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரவுடி கார்த்திக்கை பெங்களூருவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவுக்கு, அல்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருந்தார்.

ரவுடிக்கு ஓராண்டு தடை

இதையடுத்து, ரவுடி கார்த்திக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா பரிசீலித்து வந்தார். இந்த நிலையில், பிரபல ரவுடி கார்த்திக் பெங்களூரு நகருக்கு ஒரு ஆண்டு நுழைய தடை விதித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "ரவுடி கார்த்திக் மீது 11 வழக்குகள் உள்ளன. அவர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவர் பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் வகையிலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக பெங்களூரு நகருக்குள் இன்னும் ஒரு ஆண்டு நுழைய ரவுடி கார்த்திக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளேன், "என்றார்.

Next Story