பி.யூ. கல்லூரி மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்; 3 பேர் கைது


பி.யூ. கல்லூரி மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2021 3:04 AM IST (Updated: 28 April 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் தாலுகாவில், பி.யூ. கல்லூரி மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலனையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி 3 பேரும் கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கோலார்: மாலூர் தாலுகாவில், பி.யூ. கல்லூரி மாணவியை கற்பழித்து, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலனையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி 3 பேரும் கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

பி.யூ. கல்லூரி மாணவி

கோலார் மாவட்டம், மாலூர் தாலுகா, ஹூங்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. 

திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த சரண் அடிக்கடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தற்போது 17 வயதாகிறது. 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து பல முறை சரண், மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து இருக்கிறான்.

ஆபாச வீடியோ...

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு(2020) டிசம்பர் மாதம் சரண், மீண்டும் மாணவியை நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்வதாக நம்பவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதை தொடர்ந்து அதே மாதம் யராப் என்பவன் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘உன்னுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. நீ நேரடியாக வந்தால் , வீடியோவை அழித்து விடுவேன்’’ என கூறியுள்ளான். இதையடுத்து மாணவி, யராப் கூறிய இடத்திற்கு சென்றிருக்கிறாள். அப்போது யராப், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

பாலியல் பலாத்காரம்

அதன் பின்னர், இந்த மாதம்(ஏப்ரல்) கிரண் என்பவன் மாணவியை தொடர்பு கொண்டு பேசி ஆபோச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டியுள்ளான். மேலும் தான் கூறும் இடத்திற்கு வருமாறு மாணவியை அழைத்துள்ளான். இதனால் பயந்துபோன மாணவி கிரண் கூறிய இடத்திற்கு சென்றிருக்கிறாள். 

அப்போது அங்கு வைத்து மாணவியை, கிரண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், தொடர்ந்து தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும். இல்லையென்றால், ஆபாச வீடியோவை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மாணவியை கிரண் மிரட்டி உள்ளான். 

போலீசில் புகார்

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய தாயிடம் கூறி இருக்கிறாள். அதன்பின் மாணவியின் தாய் இதுபற்றி மாலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மாணவியின் காதலனான சரண், மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்கும்போது அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறான். பின்னர் அதை தனது நண்பர்களான யராப், கிரண் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளான். 

கைது

பின்னர் அவர்களுக்கு தனது காதலியை விருந்தாக்கியதும், 3 பேரும் சேர்ந்து அடிக்கடி மிரட்டி காதலியிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் யராப், சரண் மற்றும் கிரண் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story