கொரோனா உதவி மையம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சிக்கமகளூரு பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் கொரோனா உதவி மையத்தை, சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு: சிக்கமகளூரு பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் கொரோனா உதவி மையத்தை, சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கொரோனா உதவி மையம்
சிக்கமகளூரு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் கொேரானா பாதிப்பு உள்ளானவர்களுக்கு ஆம்புலன்ஸ், சிகிச்சை உள்ளிட்ட வசதிகளுக்கு உதவும் வகையில் கொரோனா ஆலோசனை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை, சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிக்கமகளூருவில் கொேரானாவால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதை தடுக்கும் வகையில் பா.ஜனதா சார்பில் கொேரானா உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு 10-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களை தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஒரு குழு உள்பட பத்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
உதவி புரிவதற்கு...
அவர்கள், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொேரானா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்கு முன்வருவார்கள். ஆகையால் அவர்களது செல்போன் எண்ணை பா.ஜனதா அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மக்கள் உதவி பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்து கொள்கிறேன். தற்பொழுது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் அனைத்து பா.ஜனதா அலுவலகத்தில் கொரோனா ஆலோசனை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி கொரோனா குறித்த அவர்களது சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தகுந்த சிகிச்சை அளிக்க பா.ஜனதா முன்வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story