காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமப்பாவுக்கு கொரோனா; மனைவிக்கும் வைரஸ் தொற்று


ராமப்பா எம்.எல்.ஏ.
x
ராமப்பா எம்.எல்.ஏ.
தினத்தந்தி 27 April 2021 10:02 PM GMT (Updated: 27 April 2021 10:02 PM GMT)

ராமப்பா எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

பெங்களூரு: தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் ராமப்பா. இவரும், இவரது மனைவியும் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

 இந்த நிலையில் ராமப்பா எம்.எல்.ஏ., அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரையின்பேரில் ராமப்பாவும், அவரது மனைவியும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உள்ளான ராமப்பா எம்.எல்.ஏ., கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதேபோல் பெலகாவி மக்களவை தொகுதிக்கு கடந்த 17-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் மனைவி மங்களா போட்டியிட்டு இருந்தார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில் மங்களாவுக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இதனால் அவர் மருத்துவரின் அறிவுரையின்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி மங்களா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Next Story