ஆத்தூரில் டாக்டர் தம்பதிக்கு கொரோனா
ஆத்தூரில் டாக்டர் தம்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் நாராயணசாமி தெரு 5-வது குறுக்கு சந்தில் 50 வயதுடைய டாக்டரும், அவரது மனைவி 40 வயது டாக்டரும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆத்தூர் காந்தி நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டாக்டர் தம்பதி உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த நாராயணசாமி தெரு 5-வது குறுக்கு சந்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு தகரம் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் அங்கு கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.
இதனிடையே ஆத்தூரில் முக கவசம் அணியாத 15 பேருக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கடை உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story