தாடிக்கொம்புவில் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
தாடிக்கொம்புவில் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாடிக்கொம்பு,
தாடிக்கொம்பு முத்துநகரில் வசித்து வருபவர் வில்சன் செபாஸ்டின் (வயது 42). இவர், வேடசந்தூர் அருகே செயல்படுகிற தனியார் புத்தக பதிப்பகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சோபியா செல்வராணி (40). இவர்களது மகன் இன்பென்ட் (17). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று காலை வில்சன் செபாஸ்டின் வேலைக்கு சென்ற பிறகு, சோபியா செல்வராணியிடம் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தருமாறு இன்பென்ட் கேட்டார். அதற்கு தந்தை வேலைக்கு சென்று திரும்பியவுடன் வாங்கி தருவதாக கூறினார். இதனை இன்பென்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு உடனடியாக வாங்கி தருமாறு சோபியா செல்வராணியிடம் கேட்டார்.
மேலும் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக அவர் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். காலை 11 மணி முதல் 3 மணி வரை அவர் அறையை திறக்கவில்லை. இ்தனால் சந்தேகம் அடைந்த சோபியா செல்வராணி, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனைக்கண்ட சோபியா செல்வராணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இன்பென்டை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story