அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிதிநிறுவன மேலாளர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிதிநிறுவன மேலாளர் பலி ஆனார்.
புஞ்சைபுளியம்பட்டி,
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் விஷால்பிரசாத் (வயது 25). இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த விஷால்பிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த விஷால்பிரசாத்துக்கு ஒரு மகன் உள்ளார்.
Related Tags :
Next Story