கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 April 2021 4:13 AM IST (Updated: 28 April 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஏப்:
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி தலைமையில் போலீசார் சமாதானபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு மொபட்டில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மொபட்டில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை, கஞ்சாவுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் திம்மராஜபுரத்தை சேர்ந்த பால்கணேசன் மகன் சங்கர் (வயது 19) என்பதும், நடுவக்குறிச்சி வாகைக்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பெற்றுக் கொண்டு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கும் கூடுதல் விலைக்கு ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சங்கரை கைது செய்தனர். மேலும் அவர் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Next Story