பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து


பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 28 April 2021 4:33 AM IST (Updated: 28 April 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூரமங்கலம்:
பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயணிகள் எண்ணிக்கை
பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ரெயில்களின் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06029) மற்றும் கோவை - சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06030) நாளை (வியாழக்கிழமை) முதல் ரத்து செய்யப்படுகிறது.
கோவை -பெங்களூரு உதய் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06154), பெங்களூரு- கோவை உதய்சிறப்பு ரெயில் (06153),  கொச்சுவேலி- பனஸ்வாடி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06319) நாளை முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
மறு அறிவிப்பு
இதே பனஸ்வாடி- கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06320) 30-ந் தேதி முதலும், எர்ணாகுளம்-பனஸ்வாடி சிறப்பு ரெயில் (06129) வருகிற 3-ந் தேதி முதலும், பனஸ்வாடி -எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) வருகிற  4-ந் தேதி முதலும் ரத்து செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட ரெயில்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story