புஞ்சைபுளியம்பட்டி அருகே தெருவிளக்கை திருடியவர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே தெருவிளக்கை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சி கொண்டையம்பாளையத்தில் ஊராட்சி சார்பில் அமைத்து இருந்த சோலார் பேனல் தெரு விளக்கை நள்ளிரவில் யாரோ திருடி சென்றுவிட்டார்கள்.
இதுபற்றி ஊர் பொதுமக்கள் விசாரித்த போது கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மின்விளக்கை திருடிச்சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கருப்புசாமியை பொதுமக்கள் பிடித்து புஞ்சைபுளியம்பட்டிபோலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்தார்கள்.
Related Tags :
Next Story