வியாபாரியை தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் கைது


வியாபாரியை தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2021 5:15 AM IST (Updated: 28 April 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரியை தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேரை பவானி போலீசார் கைது

பவானி
பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35). பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு பொதுக்கழிப்பறைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த குருநாதன் (45), அவருடைய மகன்கள் வேல்முருகன் (23), விக்னேஷ் என்கிற லிங்கேஷ் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பழனிசாமியை பிளாஸ்டிக் ைபப்பால் அடித்து காயப்படு்த்தியதாக தெரிகிறது. உடனே அவர் மீட்கப்பட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதன், வேல்முருகன், விக்னேஷ் ஆகியோரை தேடி சென்றபோது, 3 பேரும் தலைமறைவாகிவிட்டார்கள். ஒரு ஆண்டாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று பவானி அருகே உள்ள பெரிய வடமலைபாளையம் பகுதியில் 3 பேரும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் கைது செய்தார்கள். பின்னர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தார்கள்.

Related Tags :
Next Story