வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரம்


வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 April 2021 5:16 AM IST (Updated: 28 April 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு
வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மே 2 எண்ணிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 6-ந் தேதி தேர்தல் முடிந்தது. வருகிற 2-ந் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு போடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்பாடுகள்
வாக்கு எண்ணிக்கைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்பவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே வாக்கு எண்ணிக்கை முடிவினை தெரிந்து கொள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அருகே பலரும் கூடும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் சிரமமின்றி முடிவுகளை தெரிந்து கொள்ள ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் முகப்பு பாதையில் நேற்று ஒலிபெருக்கிகள் அமைக்கும் பணி நடந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்படும். அதனை வாக்கு எண்ணும் மையத்தில் வெளியில் இருந்தே கட்சியினர், பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story