தாளவாடி பகுதியில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை


தாளவாடி பகுதியில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 27 April 2021 11:46 PM GMT (Updated: 27 April 2021 11:46 PM GMT)

தாளவாடி பகுதியில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள்.

தாளவாடி
தாளவாடி பகுதியில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள். 
முட்டைக்கோஸ்
தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தொட்டகாஜனூர், திகனாரை, பனக்கள்ளி, மல்லன்குழி, தலமலை போன்ற மலைக்கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாதப் பயிரான முட்டைகோஸ் தற்போது அறுவடை செய்யபட்டு வருகிறது. இந்தநிலையில் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசை 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை மட்டுமே கேட்கிறார்கள். 
வேதனைதான் மிச்சம்
இதுபற்றி தாளவாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘ஒரு ஏக்கரில் முட்ைடக்கோஸ் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் செலவாகிறது. 12 டன் வரை மகசூல் எடுக்க முடியும். கடந்த ஆண்டு ஒரு கிலோ முட்டைகோஸ்  10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தார்கள். இந்த அண்டு 2 ரூபாய்க்கு கேட்கிறார்கள். இதேபோல் ஒரு கிலோ தக்காளியை 2 ரூபாய்க்கும், பீட்ரூட்டை 3 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். எங்களுக்கு கடனும், வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது என்றார்கள்.

Next Story