சேலத்தில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு
சேலத்தில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சேலம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நடைபெறும் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கம் ஆகும். அங்கு விழாவின் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் தாலியை அறுத்து வழிபடுவார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழாவில் திருநங்கைகள் திரளாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக சேலத்தை சேர்ந்த திருநங்கைகள் இந்த விழாவில் பங்கேற்க கூத்தாண்டவர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் சேலம் சந்தைபேட்டை பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டி வழிபாடு நடத்தியதாக கூறிய திருநங்கைகள், கும்மி அடித்து வழிபாட்டை நிறைவு செய்தனர்.
Related Tags :
Next Story