சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பட்டறையில் லாரி தீப்பிடித்து எரிந்தது
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பட்டறையில் நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பட்டறையில் நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி தீப்பிடித்து எரிந்தது
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சீலநாயக்கன்பட்டி அருகே லாரி பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். பட்டறையில் பழுது பார்ப்பதற்காக சில லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் அங்கு பயன்படுத்த முடியாத லாரி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த லாரியில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் லாரியின் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் லாரியில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story