தொழிலாளர் தினம், வாக்கு எண்ணிக்கை: 2 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு


தொழிலாளர் தினம், வாக்கு எண்ணிக்கை: 2 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2021 6:20 AM IST (Updated: 28 April 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் தினம், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வருகிற 1-ந் தேதியும், 2-ந் தேதியும் என 2 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதியும், சட்டசபை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி 2-ந் தேதியும் மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் என்ற தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அன்றைய நாட்களில் உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும்.
எனவே அன்றைய நாட்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story