திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.38¼ லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.38¼ லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் சில்லறை நாணயம், ரூபாய் நோட்டுகள், வெள்ளி, தங்கம், வெளிநாட்டுப்பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட அனைத்துக் கோவில்களின் உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ேநற்று இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் ரூ.38 லட்சத்து 28 ஆயிரத்து 292-ம், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story