தந்தையை கடித்ததால் ஆத்திரம் தெருநாயை அடித்து கொன்ற சிறுவன் மீது வழக்கு


தந்தையை கடித்ததால் ஆத்திரம் தெருநாயை அடித்து கொன்ற சிறுவன் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 April 2021 7:38 PM IST (Updated: 28 April 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

மும்பை சாந்தாகுருஸ் பகுதியில், தந்தையை கடித்ததால் ஆத்திரம் தெருநாயை அடித்து கொன்ற சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மும்பை, 

மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று 17 வயது சிறுவனின் தந்தையை கடித்து உள்ளது. இதனால் அந்த சிறுவன் கடந்த 24-ந்தேதி தனது தந்தையை கடித்த தெருநாயை கொடூரமாக தாக்கினான். இது பற்றி அறிந்த பீட்டா அமைப்பினர் படுகாயமடைந்த தெருநாயை மீட்டு பரேலில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தெருநாய் பலியானது.

இதனால் பீட்டா அமைப்பினர் சம்பவம் குறித்து தெருநாயை அடித்து கொன்ற 17 வயது சிறுவன் மீது சாந்தாகுருஸ் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Next Story