போலீசார் 2 முக கவசம், பேஸ் ஷீல்டு அணிந்து கொள்ள வேண்டும் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே அறிவுறுத்தல்
போலீசார் 2 முக கவசம், பேஸ் ஷீல்டு அணிந்து கொள்ள வேண்டும் என கமிஷனர் ஹேமந்த் நக்ராலே அறிவுறுத்தி உள்ளார்.
மும்பை,
மும்பையில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நகரில் இதுவரை 6¼ லட்சத்திற்கும் அதிகமானவா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்களப்பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசார் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க 2 முகக்கவசங்களை அணியுமாறு மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனா் சைதன்யா கூறுகையில், ‘‘2-வது கொரோனா அலைக்கு நகரில் இதுவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 போலீசார் உயிரிழந்து உள்ளனர். எனவே களப்பணியில் ஈடுபடும் போலீசார் பாதுகாப்பாக இருக்க 2 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு அணிந்து கொள்ளுமாறு கமிஷனர் சமீபத்தில் அறிவுறுத்தி உள்ளார்’’ என்றார்.
Related Tags :
Next Story