தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளிக்கு கொலைமிரட்டல்


தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளிக்கு கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 28 April 2021 8:11 PM IST (Updated: 28 April 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் இசக்கிராஜா (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவில் முத்தையாபுரம் அம்மன்கோவில் தெரு சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேர்ந்த சகாயம் மகன் சதீஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தங்கத்துரை மகன் செல்வகணேஷ் ஆகிய 2 பேரும் இசக்கி ராஜாவிடம் செல்போனை கேட்டுள்ளனர். அதற்கு இசக்கி ராஜா தர முடியாது என்று கூறியுள்ளார், உடனே சதீஷூம் செல்வகணேஷூம் அவதூறாக பேசி அவரை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சத்தம் போடவும், இசக்கிராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு  2 பேரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

Next Story