விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போடிப்பட்டி
விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விதைப்பண்ணைகள்
தரமான விதைகளே மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளது. எனவே தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கில் அரசு மற்றும் தனியார் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகிறது. இந்த விதைப் பண்ணைகளில் ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான விதை உற்பத்தியை உறுதி செய்கின்றனர். அந்த வகையில் உடுமலை பகுதியில் நெல், உளுந்து, கம்பு உள்ளிட்ட தானியங்களுக்கான விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடுமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணைகளில் திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த நீர் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சாகுபடி செய்யக் கூடிய பயிராக உளுந்து உள்ளது. அத்துடன் எல்லா பருவத்திலும் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளதால் பல விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உளுந்து சாகுபடி உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் உளுந்து விதைத் தேவை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் உளுந்து விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு கலவன் நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மகசூலை தீர்மானிக்கும் காரணி
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியான ஆய்வுகள் அடிப்படையில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, கூடுதல் மகசூல் தரக்கூடிய புதுப்புது ரக விதைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் உளுந்துப் பயிரில் வம்பன் 5, வம்பன் 6 மற்றும் வம்பன் 8 ரகங்கள் வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு அதிக மகசூல் கொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது வம்பன் 10 ரக உளுந்து விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆதார நிலை விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரகமானது 70 நாட்களில் அதிக மகசூல் தருவதுடன் மஞ்சள் தேமல் நோய்க்கும் அதிக எதிர்ப்புத்திறன் கொண்டதாக உள்ளது.
இந்த விதைப் பண்ணைகளில் கலவன் நீக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின்னர் கிடைக்கும் விதைகளில் முளைப்புத் திறன், பிற ரகக் கலவன், ஈரப்பதம் போன்ற காரணிகள் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்படும்.அதில் தேர்ச்சி பெற்ற விதைகள் விதைச்சான்று அலுவலர்களால் சான்று செய்யப்பட்டு தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.இதன் மூலம் பயிர் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்புத் திறனுடன் அதிக மகசூல் கிடைக்கும் சூழல் உருவாகிறது. பயிர் மகசூலை தீர்மானிக்கும் காரணிகளில் விதைத் தேர்வு அடிப்படையானது என்பதால் விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா உடனிருந்தார்.
Related Tags :
Next Story