உடுமலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் இது வரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்ததில் டிரைவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

x
தினத்தந்தி 28 April 2021 10:00 PM IST (Updated: 28 April 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் இது வரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்ததில் டிரைவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உடுமலை

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலை வேகமெடுத்து வருவதாகக்கூறப்படுகிறது. இந்த நிலையில் உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் நேற்றுமுன்தினம்  இரவு 55 வயதுடைய டிரைவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மற்ற 7 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமி நாசினி தெளிப்பு
இதைத்தொடர்ந்து உடுமலை கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் மற்றும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களுக்கு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று கிருமி நாசினி தெளித்தனர். அத்துடன் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

Next Story