வீடுகளுக்குள் புகுந்த 2 பாம்புகள்
பழனியில் வீடுகளுக்குள் 2 பாம்புகள் புகுந்தன.
பழனி:
பழனி புதுநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவரது வீட்டின் முன்பகுதியில் 3 அடி நீள விரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதுகுறித்து அவர், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர்.
இதேபோல் பழனி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரது வீட்டுக்குள் 4 அடி நீள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பழனி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட 2 பாம்புகளும் பழனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள், அந்த பாம்புகளை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story