கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி


கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 April 2021 10:07 PM IST (Updated: 28 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

தேனி: 

தேனி அரசு சட்டக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

கல்லூரி முதல்வர் அருண் தொடங்கி வைத்தார். பேராசிரியர் பிரவீன் முன்னிலை வகித்தார். 

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். 

விழிப்புணர்வு பிரசுரங்களை பஸ் நிலைய வளாகத்தில் ஒட்டினர். 

மேலும் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி இலவசமாக முக கவசங்களை வழங்கினர். 

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story