சிதம்பரத்தில் 2 பெண்கள் கொரோனாவுக்கு பலி
சிதம்பரத்தில் 2 பெண்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 27 ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 319 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் 218 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் ஆந்திரா, விஜயவாடா, சென்னை, திருச்சி, வேலூர், திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 28 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 77 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 113 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த 2 பெண்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
2 பெண்கள் பலி
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் 52 வயது மற்றும் 65 வயதுடைய பெண்கள். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி, அந்த 2 பெண்களும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் நேற்று மட்டும் 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 327 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story