மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் நெற்றியில் வெட்டு காயத்துடன் இறந்த நிலையில் ஒரு பெண்ணில் உடலும், காலில் சிராய்ப்புடன் இறந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலும் அடுத்தடுத்து கிடந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது


மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் நெற்றியில் வெட்டு காயத்துடன் இறந்த நிலையில் ஒரு பெண்ணில் உடலும், காலில் சிராய்ப்புடன்  இறந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலும் அடுத்தடுத்து கிடந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 28 April 2021 4:39 PM GMT (Updated: 28 April 2021 4:39 PM GMT)

மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் நெற்றியில் வெட்டு காயத்துடன் இறந்த நிலையில் ஒரு பெண்ணில் உடலும், காலில் சிராய்ப்புடன் இறந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலும் அடுத்தடுத்து கிடந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே வாய்க்காலில் நெற்றியில் வெட்டு காயத்துடன் இறந்த நிலையில் ஒரு பெண்ணில் உடலும், காலில் சிராய்ப்புடன்  இறந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலும் அடுத்தடுத்து கிடந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா?  என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் பிணம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு ஊராட்சியில் எல்லைப்பகுதியில் நாட்டுக்கல்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த  பகுதியில் அமராவதி புதிய ஆயக்கட்டு கால்வாயில் இருந்து பிரிந்து வரும் கிளை வாய்க்கால் செல்கிறது. தற்போது அந்த பகுதியில் நெல் அறுவடை முடிந்து விட்ட நிலையிலும் வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வாய்க்கால் வழியாக விவசாயிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் நிர்வாண நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து  காரதொழுவு  கிராம நிர்வாக அலுவலர் முஜிப்பூர் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே கணியூர் போலீசாரிடம்  கூறினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு சிவந்த நிறத்துடன் பிணமாக கிடந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று ஆங்கிலத்தில் டாட்டூ வரைந்து இருந்தது. மேலும் அந்த பெண்ணின் வலது பக்க நெற்றியில் வெட்டு காயம் இருந்தது. 
சிராய்ப்பு காயம்
இதேபோல் இந்த பெண் பிணம் கிடந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 40 வயது மதிக்க தக்க மற்றொரு பெண்ணின் பிணம் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்த பெண்  நைட்டி அணிந்து இருந்தார். நெற்றியில் சிவப்பு கலர் ஸ்டிக்கர் பொட்டு வைத்துள்ளார். 2 காதுகளில் தோடுகள் இல்லை. 
 வலது காலில் மிஞ்சியும், அதனுடன் ஒரு இரும்பு வளையம் ஒன்றும், இடது கை மோதிர விரலில் மோதிரம் ஒன்றும், வலது கையில் கவரிங் வளையல் ஒன்றும் அணிந்துள்ளார். மாநிறத்துடன் காணப்பட்ட இந்த பெண்ணின் இடது முன் கை மற்றும் வலது  காலில் சிராய்ப்பு காயம் உள்ளது. 
இதையடுத்து அந்த 2 பெண்களின் உடல்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 பெண்களும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று போலீசார்  சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொலையா?
மேலும் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி, தாராபுரம் பகுதி போலீஸ் நிலையங்களில் பெண்கள் மாயம் என கடந்த 2 நாட்களில் வழக்குகள் ஏதாவது பதிவாகி உள்ளதா?  என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  சிவந்த நிறத்தில் பிணமாக கிடந்த பெண்ணின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாலும், அவர் நிர்வாண நிலையில் கிடந்ததாலும் அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் வாய்க்காலில் மூழ்கி இறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அந்த வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது. எனவே தண்ணீரில் மூழ்கி அந்த பெண் இறக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 
அதேபோல் காலில் சிராய்ப்பு இருந்த மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த பெண்ணை சாலையில் போட்டு தரதர சென்று இழுத்து இருப்பதால் காலில் சிராய்ப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 2 பெண்களையும் கடத்தி வந்த ஆசாமிகள் அவரை கொன்று அடுத்தடுத்து பிணத்தை வாய்க்காலில் வீசி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகின்றனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா?  என்று உறுதியாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கடத்தூர் அருகே அமராவதி கிளை வாய்க்காலில் அடுத்தடுத்து 2 பெண்களின் பிணம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story