திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவினாசி துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண் இளநிலை உதவியாளர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பல்லடம் ரோட்டில் உள்ளது.
இந்த கலெக்டர் அலுவலகத்தில் 7 தளத்தில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஏராளமான அறைகளும் உள்ளன. இதற்கிடையே முதல் தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கொரோனா தொற்று உறுதி
இவருக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று நேற்று உறுதியானது.
இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. முன்னதாக அலுவலக அறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயதுள்ள மண்டல பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி அலுவலகம் நேற்று மாலை முதல் 30-ந்தேதி வரை அடைக்கபட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். அவினாசி போலீஸ் நிலையத்தில் 40 வயதுள்ள பெண் போலீஸ் ஏட்டுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதபோல் அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 28 வயதுள்ள பெண் துணை செயற்பொறியாளருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அவினாசி வி.பி.கார்டன் பகுதியில் 8 மாத கர்ப்பிணி மற்றும் 4 பேர் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story