தாராபுரம் அருகே அரசு பஸ்மோதி பலியான வாலிபா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தாராபுரம் அருகே அரசு பஸ்மோதி பலியான வாலிபா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் அருகே அரசு பஸ்மோதி பலியான வாலிபா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விபத்தில் வாலிபர் பலி
திருப்பூா் மணியகாரம் பாளையத்தை அடுத்துள்ள வள்ளியம்மை நகா் பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை. இவரது மகன் ரவிக்குமாா் (வயது38). திருமணம் ஆகாதவா். இவா் கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூா் நோக்கி மோட்டார்சைக்ளில் சென்று கொண்டு இருந்தாா்.
தாராபுரம் அருகே உள்ள ஈரோடு ரோடு பிாிவு அருகே அவா் சென்றபோது திருப்பூாில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று அவா் மீது மோதியது. அதில் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமாா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தாா். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில் இழப்பீடு கேட்டு ரவிக்குமாரின் குடும்பத்தினர் தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தனர்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் தாராபுரம் வக்கீல் எம்.ராஜேந்திரன் ஆஜராகி வந்தார்.
அரசு பஸ் ஜப்தி
இந்த வழக்கில் ரவிக்குமாா் குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 57 ஆயிரத்து 457 வழங்கவேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு தீா்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நஷ்டஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் தாமதம் செய்து வந்தது. இதையடுத்து நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவின் போில் கோா்ட்டு பணியாளா்கள் தாராபுரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த திருப்பூா்-போடி அரசு பஸ்சை ஜப்தி செய்தனா். அதில் இருந்த பயணிகளை இறங்க செய்து வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனா்.ஜப்தி செய்த பஸ்சை நீதிமன்றத்துக்கு ஓட்டிவரப்பட்டு நீதிபதி முன்நிறுத்தி சீல் வைத்தனா். பின்னா் அந்த பஸ் தாராபுரம் போக்குவரத்து கிளையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story