கிணத்துக்கடவு பகுதியில் முகக்கவசம் அணியாத 300 பேருக்கு அபராதம்
கிணத்துக்கடவு பகுதியில் முகக்கவசம் அணியாத 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிணத்துக்கடவு போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், சிக்கலாம்பாளையம், ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முககவசம் வழங்கி வருகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 300 பேர்முககவசம் அணியாமல் சென்றதாக அவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூலித்தனர்.
இதேபோல் வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் கிணத்துக்கடவு, வடபுதூர், சிக்கலாம்பாளையம் உள்ளிட்ட பல ஆய்வு நடத்தி அரசு உத்தரவை மீறியதாக 3 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story