வால்பாறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை


வால்பாறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 April 2021 4:57 PM GMT (Updated: 28 April 2021 4:57 PM GMT)

வால்பாறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வாக்கு எண்ணும் பணி

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதில் வால்பாறை பகுதியை சேர்ந்த அரசு பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர்.

 இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பரிசோதனை

வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் வாக்கு எண்ணிக்கை பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் 35 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். 

இவர்களுக்கு வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமண் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் இந்த கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமை நடத்தினார்கள்.

தொடர்ந்து வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் பொதுமக்கள் மற்றும் அறிகுறிகள் இருப்பதாக உணரக்கூடியவர்கள், தொடர்ந்து காய்ச்சல், சளி இருப்பவர்கள், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story