கிருஷ்ணர் அலங்காரம்


கிருஷ்ணர் அலங்காரம்
x
தினத்தந்தி 28 April 2021 10:27 PM IST (Updated: 28 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்

சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு கோவில்களில் விழாக்கள் நடந்து வருகிறது. இதேபோல் சோழவந்தான் ெஜனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story