பெண்ணிடம் 5 பவுன் அபேஸ்


பெண்ணிடம் 5 பவுன் அபேஸ்
x
தினத்தந்தி 28 April 2021 10:27 PM IST (Updated: 28 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்

மதுரை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி(வயது 34). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அதில் 5 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story