பொள்ளாச்சியில் மருத்துவ முகாம்
பொள்ளாச்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கொரோனா 2-வது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
இதையடுத்து, வருவாய் கோட்ட பகுதிகளில் சுகாதார துறை சார்பில், தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை முகாம் நேற்று பொள்ளாச்சி நகரில் சுப்பையன்நகர், வெங்கடேசா காலனி, நல்லப்பா நகர், கண்ணப்பன்நகர் ஆகிய பகுதியிலும், வடக்கு ஒன்றியத்தில் ஆலாம்பாளையம், ராமபட்டிணம், நல்லிக்கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளிலும்,
தெற்கு ஒன்றியத்தில் பழையூர், நாச்சிபாளையம், ஆவல்சின்னாம்பாளையம், மோதிராபுரம், சிங்காநல்லூர், மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், பாலமநல்லூர், சமத்தூர் ஆகிய இடங்களிலும், ஆனைமலையில் ரமணமுதலிபுதூர், கோட்டூரில் குப்பன் செட்டியார் வீதி, கிழவன்புதூர், வால்பாறை ஹைபாரஸ்ட் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story