திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 28 April 2021 5:10 PM GMT (Updated: 28 April 2021 5:10 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாக்கு எண்ணிக்கை 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்் தேதி நடந்து முடிந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாணியம்பாடி அருகே உள்ள மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மே 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 56 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் ஒதுக்கீடு
வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் என மொத்தம் 3 நபர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் அதன்படி மொத்தமுள்ள 56 மேஜைகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேர்த்து மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு சேர்த்து வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், பார்வையாளர்கள் என 216 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


வாக்கு எண்ணும் நபர்களைத் தவிர பிற பணிகளுக்கு சுமார் 600 பணியாளர்கள் உள்பட மொத்தம் 816 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் சிவன் அருள் முன்னிலையில் நடைபெற்றது.

Next Story