கூடுதல் பணியாளர்களை நியமிக்ககோரி அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்


கூடுதல் பணியாளர்களை நியமிக்ககோரி அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2021 10:40 PM IST (Updated: 28 April 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

பணிச்சுமையால் அவதிப்படுவதால் கூடுதல் பணியாளர் களை நியமிக்ககோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

பணிச்சுமையால் அவதிப்படுவதால் கூடுதல் பணியாளர் களை நியமிக்ககோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இதுதவிர இங்கு கொரோனா சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய நர்சுகள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதலாக நர்சுகள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு பணிக்கு சென்றனர்.

இது குறித்து நர்சுகள் கூறியதாவது:- 

நர்சுகள் பற்றாக்குறை

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். 

மேலும் இங்குள்ள கொரோனா வார்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 120 நோயாளிகளுக்கு ஒரு நர்சு மட்டுமே உள்ளோம். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.  

தற்போது இங்கு 900 நர்சுகள் தேவைப்படுகிறார்கள். ஆனால் 300 நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே கூடுதலாக நர்சுகளை நியமித்து ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 


Next Story