கச்சிராயப்பாளையம் வாரச்சந்தையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள்
கச்சிராயப்பாளையம் வாரச்சந்தையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சி சார்பில் புதிய பஸ்நிலையம் பகுதியில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கச்சிராயப்பாளையம், கரடிசித்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புறபகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடை வைத்து காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று சந்தை கூடியபோது வியாபாரிகள், விவசாயிகள் கடைவைத்து பொருட்களை விற்பனை செய்தனர். பொதுமக்களும் அவற்றை வாங்கி சென்றனர். ஆனால் சிலர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் அதனை காற்றில் பறக்கவிட்டதை காண முடிந்தது. இதனால் தொற்று அதிகரிக்க அபாயம் இருப்பதால் இங்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுகளை பின்பற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story