போலி நகையை அடகு வைத்தவர் கைது
போலி நகையை அடகு வைத்தவர் கைது செய்யப்பட்டனர்
பேரையூர்
பேரையூர் அருகே உள்ள கூவலப்புரத்தை சேர்ந்தவர் விஜயன்(வயது 52) பேரையூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்தநிலையில் பேரையூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 8½ பவுன் நகைகளை அடகு வைக்க 2 பேரும் சென்றனர். அங்கு தாமதம் ஏற்பட்டதால் விஜயனிடம் நகையை கொடுத்துவிட்டு சீனிவாசன் சென்று விடுகிறார். நகையில் 916 கே.டி.எம். முத்திரை இருந்ததாலும், சீனிவாசன் வாடிக்கையாளர் என்பதாலும், நிதி நிறுவன மேலாளர் ரமேஷ்குமார் நகைக்காக ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் கொடுத்துள்ளார். விஜயனும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் நிதி நிறுவன நகை மதிப்பீட்டாளர் நகையை பரிசோதனை செய்துள்ளார். அப்போது நகை போலியானது என்று தெரியவந்தது. இதுகுறித்து பேரையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் விஜயன், சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விஜயனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story