உளுந்தூர்பேட்டை அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது


உளுந்தூர்பேட்டை அருகே  லாரி டிரைவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 28 April 2021 5:48 PM GMT (Updated: 28 April 2021 5:48 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்

உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மணிவாசகம்(வயது 29). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை சேலம் ரவுண்டானா பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து மணிவாசகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற நபரோடு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். 

இதுகுறித்து மணிவாசகம் எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி மணிவாசகத்திடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கஞ்சா கார்த்தி(32), தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டியை சேர்ந்த சின்னசாமி(24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து கத்தி, ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story