குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி:
தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
அணையில் இருந்து குடிநீருக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்தது.
குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 150 கனஅடி வீதம் கூடுதலாக திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story