வழிப்பறி வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம்
வழிப்பறி வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டை, ஏப்.29-
புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 26). ரவுடியான இவர் கத்தியை காட்டி மிரட்டி பூ மார்க்கெட் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். இந்த நிலையில் பூபதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி பூபதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்றகுற்றசெயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தும், அச்சுறுத்தி வரும் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் படிநடவடிக்கைஎடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Tags :
Next Story