ரெயிலில் வந்த 16 பேர் கொரோனா முகாமில் தங்க வைப்பு


ரெயிலில் வந்த 16 பேர் கொரோனா முகாமில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 28 April 2021 6:20 PM GMT (Updated: 28 April 2021 6:20 PM GMT)

ரெயிலில் வந்த 16 பேர் கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

பரமக்குடி, 
வடமாநிலம் மண்டுவாடியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 12 பேரும், உத்தர பிரதேசம் சோன்பாத் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், ராமேசுவரத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை பரமக்குடி ரெயிலில்
 நிலையத்தில் நிறுத்தி பரமக்குடி தாசில்தார் தமீம்ராஜா தலைமையில் சுகாதாரத்துறையினர் அவர்களை கொரோனோ பரிசோதனை செய்து பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கொரோனா முகாமிற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story