வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர்


வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர்
x
தினத்தந்தி 28 April 2021 11:52 PM IST (Updated: 28 April 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று வனத்துறையினர் கூறினர்.

வேதாரண்யம்;
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று வனத்துறையினர் கூறினர். இது குறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது
வனவிலங்குகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் மான்கள், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள், நரி, மட்டக்குதிரைகள் உள்ளன.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள், குளம், குட்டைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் உள்ளது. வனவிலங்குகள் வறட்சி இன்றி தண்ணீர் குடிக்க போதிய அளவு  தண்ணீர் சரணாலயத்தில் உள்ளது. இருப்பினும் சரணாலய உட்பகுதியில்  ஆங்காங்கே  25-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளுக்கு பைப்லைன் மூலம் தண்ணீர்  நிரப்பி தட்டுப்பாடின்றி வனவிலங்குகள் தண்ணீரை குடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளின் நடமாட்டம் டிராப்பிங் கேமரா மூலம் வனப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  
மூடப்பட்ட சரணாலயம்
கொரோனா பரவல் காரணமாக கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. மேலும் சாலை ஓரங்களில் உள்ள முனியப்பன் ஏரி, அருவங்கன்னிகுளம், தீர்த்தக்குளம்,
அவுலியாகனிகுளம் போன்றவற்றிலும் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரையும் வனவிலங்குகள் அவ்வப்போது பருகிவருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story