13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்


13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 28 April 2021 11:53 PM IST (Updated: 28 April 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி

ஊட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கப்பத்தொரை கிராமத்தை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 66). கூலி தொழிலாளி. இவர் தோட்ட வேலைகளுக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் முஸ்தபா அதே பகுதியில் உள்ள 13 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம் பழகி உள்ளார். 

பின்னர் அவர் சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில், அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கேட்ட போது, சிறுமி அழுதபடி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினாள்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முஸ்தபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story