சலூன் கடைகள் திறக்க வலியுறுத்தல்
சலூன் கடைகளை திறக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி பகுதியில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்கப் பட்டது. தமிழகத்தில் 2-ம் அலை கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது அதன்படி மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பி இருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு வந்த முதல் அலை கொரோனாவில் 6 மாதங்கள் கடைகள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வந்தனர். எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து தமிழக அரசு அறிவித்தபடி கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கீழக்கரை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பூபதியிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம், செயலாளர் கண்ணன், பொருளாளர் சண்முகம், தீனதயாளன், மனோகரன் உள்பட அனைத்து சலூன் கடைக்காரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story