போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்
திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்து உள்ளதால் கொேரானா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
திருவாரூர்;
திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்து உள்ளதால் கொேரானா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் நகரில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகை கடை என அனைத்து பொருட்களும் கிடைக்கும் ஒரே இடமாக கடைவீதி உள்ளது. இங்கு சாதாரண நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் எந்த நேரத்திலும் கடைவீதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக வாகன ஒட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கனரக வாகனங்கள்
கடைவீதி உள்ளே கனரக வாகனங்கள் செல்ல காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் சரிவர கடைபிடிப்பதில்லை. இதனால் எல்லா நேரங்களிலும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து தடைபடுகிறது. திருவாரூரில் போக்குவரத்து, சட்டம்- ஒழுங்கு போலீசார் பலரும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் பலரும் ஈடுபடுவதால் போக்குவரத்து சீரமைக்கப்படாமல் கடைவீதி உள்பட பல இடங்களில் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கொரோனா அபாயம்
உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி முககவசம் அணியாதவர்கள் மீது வழக்கு போடுவதில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே போக்குவரத்தை சீரமைக்க போலீசாரை நியமிக்க வேண்டும். வாகனம் நிறுத்த இடவசதி, கனரக வாகனங்கள் கடைவீதிக்குள் வருவதற்கு உரிய கால நேரத்தை கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிப்பதால் சமூக இடைவெளி காற்றில் பறந்து உள்ளது. இதனால் கொரோனா தொற்றும் பரவும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story