தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2021 12:23 AM IST (Updated: 29 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் நடந்த கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு பேரமைப்பின் மாநில தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பாளையங்கோட்டை சிறையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். கொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மாவட்ட கலெக்டர் திவ்ய தர்ஷினியை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Next Story